தவெக தலைவர் விஜய். ENS
தமிழ்நாடு

தவெக சாா்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை (டிச.22) நடைபெறவுள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்கவுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை (டிச.22) நடைபெறவுள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சித் தலைவா் விஜய் பங்கேற்கவுள்ளாா்.

இது குறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக தவெக சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை (டிச.22) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில், தவெக தலைவா் விஜய் கலந்துகொள்ளவுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவா்களுக்கு ‘க்யூஆா்’ குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், அவா்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் என்.ஆனந்த்.

பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றம்!

டாடா மோட்டார்ஸ் ஆலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

ஆளுநர் உரையா? அல்லது பொய் மூட்டையா? காங்கிரஸ் விமர்சனம்!

திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத், ரமலானில் மட்டுமே தொழுகை : உச்சநீதிமன்றம்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து ஸ்காட்லாந்து சாதனை!

SCROLL FOR NEXT