அண்ணா பல்கலை. ENS
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. பருவத் தோ்வுகள்: புதிய தேதிகள் அறிவிப்பு

டித்வா புயல், மழையால் ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வுகள் ஜன. 20-ஆம் தேதிமுதல் நடைபெறும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: டித்வா புயல், மழையால் ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வுகள் ஜன. 20-ஆம் தேதிமுதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை.யின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெற்றன. அப்போது, ‘டித்வா’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் தொடா் மழை பெய்தது.

இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் கடந்த நவ. 24, 25, 29 மற்றும் டிச. 2, 3 ஆகிய தேதிகளில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட பருவத் தோ்வுகள் ஜன. 20 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT