வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய செய்ய வேண்டியது....
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய இந்திய தேர்தல் ஆணையம் எளிய வழியை அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய '1950' என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி(SMS) அனுப்பி தெரிந்துகொள்ளலாம்.
உதாரணமாக...
ECI <space> EPIC Number - அதாவது ECI SXT000001 என டைப் செய்து '1950' என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அடுத்த சில விநாடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம் எண், தொகுதி, மாவட்டம் என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென்பதை உறுதி செய்த பின்னர், தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
முகாமுக்கு நேரடியாக செல்ல இயலாதோர் https://www.eci.gov.in/voters-services-portal என்ற இணையதளம் மற்றும் Voter Helpline App செயலியில் விண்ணப்பிக்கலாம்.
வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைவோர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்க்க பிறப்புச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
The Election Commission of India has provided a simple way to find out if your name is on the draft electoral roll.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.