தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திங்கள் கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகினர்.
தருமபுரி : தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திங்கள் கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகினர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல்(28). வேப்பிலைஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிநாத்(25). இருவரும் திங்கள் கிழமை முற்பகலில் பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில்சென்றனர்.
பெல்ரம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு, பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை மருத்துவர் சோதனை செய்ததில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவர் உடலையும் மாரண்ட அள்ளி போலீசார் உடல் கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Road accident near Dharmapuri Two youths killed spot
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.