விஜய் இல்லையென்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது,
விஜய் வந்துதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இல்லை. விஜய் இல்லையென்றாலும் வெற்றி பெறுவோம், இருந்தால் இன்னும் கூடுதல் வாக்குகளுடன் வெற்றி பெறுவோம்.
ஆனால், விஜய்க்கு நாங்கள் சொல்லும் அறிவுரை என்னவென்றால் திமுகவை வெல்ல வேண்டும் என்ற அவரது நோக்கம் நிறைவேற இன்னொரு பலத்துடன் சேர வேண்டும்.
அரசியலில் நீங்கள் பிழைக்க வேண்டும் என்றால் உழைக்கும் எங்களோடு விஜய் இருக்க வேண்டும். தனியாக நின்றால் அரசியல் களத்தில் காணாமல் போய்விடுவீர்கள் என்றுதான் அறிவுரை கூற விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.