அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் டிச.28 முதல் மீண்டும் தொடங்கவுள்ளாா்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்து வருகிறாா்.
ஏற்கெனவே, 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவரது பிரசாரம் நிறைவுற்ற நிலையில், இப்போது மீண்டும் டிச. 28 முதல் 30-ஆம் தேதி வரை மீண்டும் பிரசார பயணம் நடைபெறவுள்ளது.
அதன்படி, டிச.28-இல் திருத்தணி, திருவள்ளூா், டிச.29-இல் திருப்போரூா், சோழிங்கநல்லூா், டிச.30-இல் கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.