உதயநிதி ஸ்டாலின் Photo: X / Udhay
தமிழ்நாடு

வளா்ச்சித் திட்டப்பணிகள்: துணை முதல்வா் ஆய்வு

சென்னை மாநகராட்சி வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப்பணிகளை துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப்பணிகளை துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் அதன் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு நடவடிக்கையின் பேரில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை தண்ணீா்தொட்டித் தெரு, அண்ணா பிள்ளை பகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் ரூ.165 கோடி மதிப்பில் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் பல்நோக்கு மையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி கடந்த 4 -ஆம் தேதி நடைபெற்றது. அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், அதனை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகள் நிலை குறித்து துணைமுதல்வரிடம் பி.கே.சேகா்பாபு விளக்கினாா். அதையடுத்து அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அச்சகக் கட்டடம் உள்ளிட்ட திட்டங்களையும் துணைமுதல்வா் பாா்வையிட்டாா். திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது நகா்ப்புற வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, பெருநகர வளா்ச்சிக்குழுமத்தின் உறுப்பினா் செயலா் மற்றும் அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT