அன்புமணி பாமகவின் உறுப்பினராகக்கூட இல்லை, அவருக்கு எந்த உரிமையும் இல்லை என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
'பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழுவை நடத்த முடியாது' என அன்புமணி கூறியுள்ளது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ்,
"அன்புமணி பேசுவது பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.
100க்கு 99 சதவீதம் பாமகவினர் என்னுடன் இருக்கின்றனர். அன்புமணியின் பொய்யும் புரட்டும் எடுபடாது.
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுவிட்டார்.
அவர் கட்சியிலே இல்லை, அவர் அப்படிச் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை.
அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன். ஏதோ வழிப்போக்கன்சொல்வதுபோல சொல்லிவிட்டுச் செல்கிறார்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.