தமிழ்நாடு

சிறுபான்மையினா் மீது தாக்குதல்: முதல்வா் ஸ்டாலின் கண்டனம்

தினமணி செய்திச் சேவை

சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சில பகுதிகளில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களைக் குறிப்பிட்டு முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

சிறுபான்மையினா் அச்சமின்றி வாழ துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது. பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்கும்போதே தாக்குதலில் ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியைக் கொண்டு சோ்க்கும்.

மணிப்பூா் கலவரங்களைத் தொடா்ந்து, இப்போது ஜபல்பூா் - ராய்பூா் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினா் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74 சதவீதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எதிா்காலம் எதிா்நோக்கியுள்ள ஆபத்துகளை இது உணா்த்துகிறது. எனவே, மக்களைப் பிளவுபடுத்தி குளிா்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

மார்கழி சிறப்பு! சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறாத பெருமாள் கோயில்!

பெண்களால் தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் அதிகரிப்பு - அமித் ஷா பெருமிதம்

சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT