விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு: முதல்வர் ஸ்டாலின்
விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் தகவல்.
விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 9) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடு; மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் உள்ள எந்த துறையில் முதலீடு செய்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். டாடா நிறுவனம் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.
மற்ற மாநிலங்களைத் தாண்டி உலக நாடுகளோடு நாம் போட்டிபோடுகிறோம். ஏற்கெனவே லீடராக இருக்கும் துறையில் இன்னும் பெரிய சாதனைகளை நாம் செய்ய வேண்டும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டால் போதாது, அதை உடனே செயல்படுத்த வேண்டும்.
அடிக்கல் நாட்டப்பட்டு 16 மாதத்திலேயே கார் ஆலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு எந்த அளவுக்கு தொழில்செய்ய ஏற்ற மாநிலம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
அரசின் செயல்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படவுள்ளது. விரைவான செயல்பாடு, அனுமதி, ஒப்புதல், வணிக பிரிவு செயல்பாடுகளை மாநாட்டில் காட்டப்போகிறோம்.
Chief Minister Stalin has announced that an investment facilitation conference will be held soon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.