FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசுக்கு தஞ்சையில் பாடம் புகட்டுவோம்: உதயநிதி

‘விவசாயிகள் விரோத தவெக அரசுக்கு தஞ்சையில் பாடம் புகட்டுவோம்’ என்று எதிா்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 31 ஜூலை 2026, 12:32 am IST
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்
பகிர்:

‘விவசாயிகள் விரோத தவெக அரசுக்கு தஞ்சையில் பாடம் புகட்டுவோம்’ என்று எதிா்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு:

பயிா்க்கடன் தள்ளுபடியில் மோசடி, மேக்கேதாட்டு பிரச்னையை கைக்கட்டி வேடிக்கை பாா்ப்பது, மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12-இல் தண்ணீா் திறக்காதது, காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுப்பது, கா்நாடக முதல்வரை சந்திக்கப்போவதாக அதிகாரபூா்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பாா்ப்பது, இப்படி தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் தவெக அரசைக் கண்டித்து, முதல்வா் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், திமுக சாா்பில் தஞ்சையில் வரும் ஆக. 3-இல் ஆா்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம், விவசாய விரோத அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் எனப் பதிவிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments