கோவை மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலிருந்து மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கோயம்புத்தூரிலிருந்து இம்மாதம் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 7.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06123), மறுநாளான டிச. 30 அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரத்தைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ராமேசுவரத்திலிருந்து டிச. 30 (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06124), டிச. 31 காலை 7.30 மணிக்கு கோயம்புத்தூரைச் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்
பொள்ளாச்சி,
உடுமலைப்பேட்டை,
பழனி,
ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல்,
மதுரை,
மானாமதுரை,
ராமநாதபுரம்
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து டிச. 29-ஆம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06017), மறுநாளான டிச. 30 அதிகாலை 6.30 மணிக்கு ராமேசுவரத்தைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ராமேசுவரத்திலிருந்து டிச. 30 இரவு 9.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06124), டிச. 31 காலை 9 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்
செங்கல்பட்டு,
மேல்மருவத்தூர்,
விழுப்புரம்,
விருதாச்சலம்,
திருச்சிராப்பள்ளி,
புதுக்கோட்டை,
காரைக்குடி,
சிவகங்கை,
மானாமதுரை,
ராமநாதபுரம்
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.