தர்மேந்திர பிரதான், கனிமொழி (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

கல்வி நிதி விடுவிப்பதைத் தவிர எல்லாவற்றிலும் ஆர்வம்! மத்திய அமைச்சரை விமர்சித்த கனிமொழி!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கனிமொழி விமர்சித்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பரங்குன்றம் விவகாரம்: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்த தர்மேந்திர பிரதான், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.

செய்தியாளர்களுடன் பேசிய தர்மேந்திர பிரதான்,

“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழ் மக்களும் ஹிந்துக்களும் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை நிறைவேற்றாதது முட்டாள்தனம். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியில் தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதைத் தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்.” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கனிமொழி, “தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Interested in everything except releasing education funds: Kanimozhi criticized the Union Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! தாயாருக்காக மன்னிப்பு கோரிய மகன்!

ஷாஹீன் ஷா அஃப்ரிடிக்கு மீண்டும் முட்டியில் காயம்..! டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்குச் சிக்கல்!

ஒடிசா நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு: ஜன. 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

விடைபெற்ற 2025... புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் வரவேற்ற நியூசிலாந்து!

SCROLL FOR NEXT