தமாகா மூத்த தலைவா் தமிழருவி மணியனின் மனைவி பிரேமாகுமாரி (71) உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவரது உடல் நெற்குன்றத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமாகா தலைவா் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட பலா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
அதன் பிறகு அவரது உடல் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அரும்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.