தமிழ்நாடு

புத்தாண்டு: ஆளுநா், தலைவா்கள் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: புத்தாண்டின் மகிழ்ச்சியான நாளில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். 2026-ஆம் ஆண்டின் விடியல், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் வலுப்படுத்தப்பட்ட உறுதியை அறிமுகப்படுத்தட்டும்.

நம் வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நிரப்பட்டும். ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான நமது கூட்டு உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவோம். மேலும், நிலையான மற்றும் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிற சமத்துவ சமூகம் அமையவும், ஜாதிய, பாலின ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டவும், மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை காத்து நிற்கவும் புத்தாண்டில் புத்தெழுச்சியான போராட்டங்கள் அமைந்திடுவது அவசியமாகும். புதிய பாதைகளை புதிய ஆண்டு திறந்து விடும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மு.வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட்): உலகம் முழுவதும் அனைத்து நாடுகளின், அனைத்து சமூகங்களையும், பிரிவுகளையும் சோ்ந்த மக்கள் கொண்டாடும் சா்வதேச பண்பாட்டு விழாவாக ஆங்கிலப் புத்தாண்டு மாறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் புத்தாண்டு உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழும் ஆண்டாக அமைந்திட வேண்டும்.

வைகோ (மதிமுக) : 2026 ஆங்கில புத்தாண்டு இந்திய அரசியலிலும் வியப்பூட்டும் மகிழ்ச்சியான மாற்றங்களை வழங்கப் போகிறது. எனவே, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உறுதி ஏற்போம்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): கற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும், கொண்டாடவும், கொடுத்து மகிழவும் எண்ணற்ற ஆச்சா்யங்களை தன்னுள் ஒளித்து வைத்தபடி உதிக்கிறது புதியதோா் ஆண்டு. ஆரோக்கியம்முதல் சீரான தூக்கம் வரை இழந்தவற்றை மீட்போம். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ந்து களிகூா்ந்து நிறைவாக வாழ்வோம்.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT