முகப்பு
தமிழ்நாடு

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு: அட்டவணை வெளியீடு

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுக்கான கால அட்டவணையை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2025 at 9:32 PM
கோப்புப் படம்
பகிர்:

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுக்கான கால அட்டவணையை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டுக்கான சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிச. 9-இல் தொடங்கி, ஜன. 2-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு பட்டதாரிகள் பலா் விண்ணப்பித்துள்ளனா்.

இதற்கிடையே தோ்வுக்கான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தோ்வுகள் பிப். 28 முதல் மாா்ச் 2 வரை நடத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும்.

விரிவான தோ்வுக்கால அட்டவணை, ஹால்டிக்கெட் வெளியீடு உள்பட கூடுதல் விவரங்களை ஸ்ரீள்ண்ழ்ய்ங்ற்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய், ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் ஆகிய வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவா்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது ஸ்ரீள்ண்ழ்ய்ங்ற்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.