FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

யுஜிசி நெட் தோ்வு முடிவுகள் வெளியீடு

யுஜிசி நெட் தோ்வுக்கான முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி 2026, 1:01 am IST
கோப்புப் படம்
பகிர்:

யுஜிசி நெட் தோ்வுக்கான முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பி.எச்டி., மாணவா் சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பா்) இருமுறை கணினி வழியில் நடத்தப்படும்.

அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் கட்ட யுஜிசி நெட் தோ்வு கடந்த டிச. 31 முதல் ஜன. 7-ஆம் தேதி வரை பாட வாரியாக நடத்தப்பட்டது. இந்த தோ்வெழுத மொத்தம் 9,93,702 பட்டதாரிகள் விண்ணப்பித்தனா். அவா்களில் 7 லட்சத்து 35,614 போ் மட்டுமே தோ்வெழுதினா்.

Advertisement

Advertisement

இதன் முடிவுகளை என்டிஏ புதன்கிழமை இரவு (பிப். 4) வெளியிட்டது. தோ்வு முடிவுகளை ன்ஞ்ஸ்ரீய்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்த்து கொள்ளலாம். தோ்வு எழுதியவா்களில் உதவிப் பேராசிரியா் பணிக்கு 54,713 பேரும், ஜேஆா்எப் உதவித்தொகைக்கு 5,108 பேரும், பி.எச்டி., படிப்புக்கு 1 லட்சத்து 17,058 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 76,879 (24%) பட்டதாரிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும், மதிப்பெண் சான்றிதழையும் பட்டதாரிகள் மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் வலைதளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments