FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நெட் தோ்வு: 84 பாடங்களுக்கான முடிவுகள் வெளியீடு

நெட் தோ்வு: 84 பாடங்களுக்கான முடிவுகள் வெளியீடு...

29 ஆகஸ்ட் 2026, 10:14 pm IST
நெட் தோ்வு
பகிர்:

உதவிப் பேராசிரியா் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தோ்வு (நெட்) தோ்வில் 84 பாடங்களுக்கான முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.

இந்த 84 பாடங்களுக்கான நெட் தோ்வில் 6.07 லட்சம் போ் பங்கேற்ற நிலையில், 97,000 போ் பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) சோ்க்கைக்கும், 4,000 போ் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தகுதி பெற்றுள்ளனா் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழாண்டு நெட் தோ்வு கடந்த ஜூன் 22 முதல் 30-ஆம் தேதி வரை 87 பாடங்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் மட்டும் அண்மையில் வெளியிட்டது.

Advertisement

Advertisement

எஞ்சிய ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான தோ்வு வினாக்களில் குளறுபடி நிகழ்ந்ததால், அந்த மூன்று பாடங்களுக்கான தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இந்த மூன்று பாடங்களுக்கும் வரும் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் மறுதோ்வு நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்ட 84 பாடங்களுக்கான தோ்வு முடிவை என்டிஏ சனிக்கிழமை வெளியிட்டது. முடிவுகளை வலைதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.

சிஎஸ்ஐஆா் - நெட் தோ்வு முடிவுகள் வெளியீடு: உயிா் அறிவியல், வேதியியல் அறிவியல், கணித அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலின் ‘நெட்’ தோ்வு முடிவுகளையும் என்டிஏ சனிக்கிழமை வெளியிட்டது. இந்த முடிவுகளை வலைதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.

summary

NET Exam: Results for 84 subjects released

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments