கோப்புப் படம்  
தமிழ்நாடு

நிஜாமுதின் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தில்லி நிஜாமுதினுக்கு இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

Din

சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரத்தில் இருந்து தில்லி நிஜாமுதினுக்கு இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் - தில்லி நிஜாமுதின் இடையே வாரத்தில் மூன்று நாள்கள் ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பிப். 4-ஆம் தேதி முதல் கூடுதலாக தலா ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டியும், ஒரு மூன்றடுக்கு கொண்ட ஏசி வகுப்புப் பெட்டியும் இணைக்கப்படும்.

அதேபோல், சென்னை சென்ட்ரல் - தில்லி நிஜாமுதின் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயிலில் பிப். 5-ஆம் தேதி முதல் கூடுதலாக தலா ஒரு முதல் வகுப்புப் பெட்டியும், ஒரு மூன்றடுக்கு கொண்ட ஏசி வகுப்புப் பெட்டியும் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைரியம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு நாளை விடுமுறை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா

பெருந்துறையில் ரூ.1.54 கோடிக்கு கொப்பரை ஏலம்

அடமானம் வைக்கப்பட்ட காரை திரும்பக்கேட்ட உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் கைது

SCROLL FOR NEXT