நீதிபதி வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் மற்றும் நீதிபதி பெரியசாமி வடமலை  படம்: சென்னை உயர்நீதிமன்ற வலைதளம்.
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரை...

DIN

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் நீதிபதி வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் மற்றும் நீதிபதி பெரியசாமி வடமலை ஆகியோரை நிரந்தர நீதிபதியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023 பிப்ரவரி மாதம் நீதிபதி லட்சுமிநாராயணனும் மார்ச் மாதம் நீதிபதி பெரியசாமி வடமலையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

அதேபோல், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 3 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கொலீஜியத்தின் பரிந்துரைகள் மத்திய சட்டத்துறை வாயிலாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டு விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT