பட்டாசு ஆலையில் வெடி விபத்து. (கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்.

DIN

விருதுநகர் மாவட்டம் சின்னவாடியூர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்.

படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல்அறிந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர்.

வெடிவிபத்து நேரிட்ட ஆலையில் இருந்த ஐந்து அறைகளும் தரைமட்டமாகியிருப்பதாகவும், தீவிபத்து நேரிட்டபோது, பட்டாசு ஆலையிலிருந்த பட்டாசுகள் வெடித்ததால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பிறகு போராடி தீ அணைக்கப்பட்டது.

விபத்து நேரிட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT