கோப்புப்படம்.  
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

DIN

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் போஸ் என்பவருக்குச் சொந்தமான முதல் படகில் ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர்.

மணிப்பூர்: 5 ஏக்கர் போதைச் செடிகள் அழிப்பு!

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எஸ்.சுதன் என்பவருக்குச் சொந்தமான இரண்டாவது படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இருந்தனர்.

அதோடு மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேல் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதனிடையே மீனவர் கைது செய்யப்பட்டதற்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்!

லிட்டில் ஹார்ட்... பிரியங்கா மோகன்!

SCROLL FOR NEXT