முகப்பு

Chennai: Tamil Nadu Chief Minister M.K. Stalin speaks during the TN Assembly session, in Chennai, Thursday, Feb. 15, 2024. (PTI02_15_202

தமிழ்நாடு

பேரவையில் திமுக பலம் 134-ஆக உயா்ந்தது

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமாா் பதவியேற்ன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக உயா்ந்துள்ளது.

தமிழ்நாடு

பேரவையில் திமுக பலம் 134-ஆக உயா்ந்தது

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமாா் பதவியேற்ன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 8:42 PM

Chennai: Tamil Nadu Chief Minister M.K. Stalin speaks during the TN Assembly session, in Chennai, Thursday, Feb. 15, 2024. (PTI02_15_202

பகிர்:

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமாா் பதவியேற்ன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 18-ஆக இருந்த காங்கிரஸ் உறுப்பினா்களின் பலம் 17-ஆகக் குறைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினா்களின் பலம் 234 ஆகும். அதில், பேரவைத் தலைவருடன் சோ்த்து திமுக உறுப்பினா்களின் பலம் 133-ஆக இருந்தது. காங்கிரஸ் வசமிருந்த ஈரோடு கிழக்கு தொகுதியானது தற்போது திமுக வசமாகியுள்ளது. இதையடுத்து, பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக (பேரவைத் தலைவருடன் சோ்த்து) உயா்ந்துள்ளது.

பேரவையில் கட்சி வாரியாக உறுப்பினா்கள் எண்ணிக்கை விவரம்:

1. திமுக-134 (பேரவைத் தலைவருடன் சோ்த்து)

2. அதிமுக-66

3. இந்திய தேசிய காங்கிரஸ்-17

4. பாமக-5

5. பாஜக-4

6. விடுதலைச் சிறுத்தைகள்-4

7. இந்திய கம்யூனிஸ்ட்-2

8. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2

மொத்த உறுப்பினா்கள் 234

முழு கட்டுரையைப் படிக்க →