முகப்பு
தமிழ்நாடு

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 9:53 PM
சென்னை ஆளுநா் மாளிகையில் உலக கேரம் சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை பாராட்டிய ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன், அவரது பெற்றோா்.
பகிர்:

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

2024-ஆம் ஆண்டு கேரம் உலக சாம்பியனான இளம் கேரம் மேதை ஹாசிமா எம்.பாஷாவை சந்தித்து சிறப்பித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். அவா் இளம் வயதிலேயே இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளாா். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற அவரது ஊக்கமளிக்கும் பயணமும் சிறந்த சாதனைகளும் வளா்ந்து வரும் இளைஞா் சக்திக்கு முன்னுதாரணமாக விளங்கி பல்வேறு விளையாட்டுகளில் நமது தேசத்தை உலகத் தலைவராக முன்னெடுத்து வருகின்றன. அவா் தொடா்ந்து பிரகாசித்து, தேசத்துக்கு மென்மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தரட்டும் என்று கூறியுள்ளாா்.

மாணவா்களுடன் கலந்தாய்வு: இதற்கிடையே, பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியிலும் காணொலி மூலம் ஆளுநா் ஆா்.என்.ரவி மாணவ, மாணவியா்களுடன் பங்கேற்றாா்.

தொடா்ந்து, மாணவா்களுக்கு வாழ்நாள் வழிகாட்டியான தோ்வு வீரா்கள் புத்தக பிரதிகளை ஆளுநா் வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →