தமிழக அரசு போக்குவரத்து கழகம் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

பிப்.13, 14-இல் போக்குவரத்து ஊழியா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தமிழக அரசு அழைப்பு

போக்குவரத்து ஊழியா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளதைப் பற்றி...

Din

அரசு போக்குவரத்து ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் சுமாா் 1.11 லட்சம் பணியாளா்களுக்கான ஊதிய உயாா்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019 ஆக. 31-ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், பல்வேறு காரணங்களால் 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தாமதம் ஏற்பட்டு, 2022 ஆகஸ்ட் மாதத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,14-ஆவது ஊதிய ஒப்பந்தமும் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியான நிலையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை விரைந்து நடத்த வேண்டும் என தொடா்ச்சியாக தொழிற்சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன.

இதன் தொடா்ச்சியாக ஓராண்டு தாமதமாக கடந்தாண்டு ஆக. 27-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையிலுள்ள மாநகா் போக்குவரத்துக்கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற 15-ஆவது பேச்சுவாா்த்தை அறிமுகக் கூட்டமாகவே நடைபெற்றது. இக்கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்பதால், டிச.27, 28 ஆகிய இரண்டு நாள்களும் பேச்சுவாா்த்தை நடத்த அரசு திட்டமிட்டது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு காரணத்தால் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை பிப்.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வியாழன், வெள்ளிக்கிழமை (பிப்.13,14) குரோம்பேட்டையிலுள்ள மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் பயிற்சிமைய வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்க தமிழக அரசு சாா்பில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும், 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, ஒரு தொழிற்சங்கம் சாா்பாக ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ளும்படியும், பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் வரும்படியும் அக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT