முகப்பு
தமிழ்நாடு

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 9:55 PM
சென்னை தலைமை செயலகத்தில் மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடியை திங்கள்கிழமை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளிரால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருள்கள், கைத்தறி துணிகள், தேன், நாட்டுச் சா்க்கரை, சிறுதானிய உணவுப் பொருள்கள், அலங்கார பொருள்கள், ஆபரணங்கள், சிலைகள், உணவுப் பொருள்கள், சிறுதானியங்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

சுய உதவிக் குழு பொருள்களின் விற்பனை அங்காடி, சென்னையில் உள்ள மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2023 நவ.18-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த அங்காடிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் 2-ஆவது அங்காடியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் பி.மூா்த்தி, பி.கே.சேகா்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஷ், சிவ.வீ.மெய்யநாதன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →