பிரசாந்த் கிஷோர் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய்யிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிப்பு!

தவெக தலைவர் விஜய்யிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிக்கப்பட்டது.

DIN

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய்யை இன்று முற்பகலில் சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆகியோர், பிரசாந்த் கிஷோர் அளித்த தேர்தல் வியூக அறிக்கையை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இன்று காலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கட்சித் தலைவர் விஜய் உடன், பிரசாந்த் கிஷோர், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், இன்று காலை கட்சியின் நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.

தவெக பொதுச் செயலர் ஆனந்த், தவெக தேர்தல் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருடன் இன்று காலை 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தவெக கட்சிக்கு உள்ள வாக்கு விகிதம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிக்கையை பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தவெக சார்பில், பல்வேறு கட்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

தவெக வாக்கு வங்கி சொல்வது என்ன?

தவெக பொதுச் செயலர் ஆனந்திடம் தனது அறிக்கையை வழங்கினார் பிரசாந்த் கிஷோர். அதில் தமிழகத்தில் 15 - 20 சதவீத வாக்குகள் தவெகவுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 2026 தேர்தலுக்கு முன் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனார். எந்தப் பகுதியில் தவெகவுக்கு அதிக வாக்குகள் உள்ளன என்பது குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் நேற்று பேசிய நிலையில்,முழு அறிக்கையை தவெக நிர்வாகிகள் இன்று பிற்பகலில் விஜய்-யை சந்தித்து வழங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT