உறவினர்கள் போராட்டம் 
தமிழ்நாடு

கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்

கழுத்தில் கட்டியுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மரணமடைந்தார்.

DIN

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2 வது நாளாக முற்றுகையிட்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. 1000 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்றும் தெரிவித்தார்.

நெல்லை அரசு மருத்துவமனையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் மலையடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் (39) தனது 3வது மகன் பொன்மாறன்(4) என்ற சிறுவனுக்கு கழுத்தில் சிறிய கட்டி இருந்ததால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10ம்தேதி குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இந்நிலையில் நேற்று காலை சிறுவனுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பிறகு திடீரென சிறுவன் உடல்நிலை குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து மருத்துவமனை டீன் அலுவலகம் முன் அமர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சிறுவனின் உறவினர்கள் கூறுகையில், சிறுவனின் கழுத்தில் இருந்த கட்டியை குணப்படுத்த அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 10ம்தேதி ஸ்கேன் எடுக்கச் சென்ற மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர் ஒருவர் சிறுவனுக்கு ஊசி போட்டுள்ளனர். அதன்பின்னர் திடீரென சிறுவனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

ஸ்கேன் மையத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை. ஆகவே சிறுவன் இறந்தது அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் என குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர் . அப்போது உயிரிழந்த சிறுவன் பொன்மாறனை வளர்த்தப் பாட்டி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது. தொடர்ந்து 2வது நாளாக இன்று காலையிலும் சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT