முகப்பு
தமிழ்நாடு

பொதுத் தேர்வு: விடைத்தாள் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை!

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை...

Updated On : 19 பிப்ரவரி, 2025 at 9:31 AM
அரசு தேர்வுகள் இயக்ககம்
பகிர்:

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக தேர்வுகள் இயக்ககம் புதிய நடைமுறையை பின்பற்றுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில், மதுரையில் உள்ள பள்ளியில் மாணவரின் விடைத்தாளின் முதல் பக்கத்தை அகற்றி வேறு விடைத்தாளுடன் இணைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், விடைத்தாளில் இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் விடைத்தாள்களின் பராமரிப்புப் பணிகளை நேரடியாக மேற்கொள்ளவுள்ளது.

விடைத்தாளில் மாணவர்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும் முதல் பக்கத்தை இதுவரை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்காக ஒவ்வொரு மாவட்டத்தில் மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் இயக்ககத்தின் கண்காணிப்பில் நேரடியாக விடைத்தாளின் முதல் பக்கம் இணைக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல், விடைத்தாள்களின் அனைத்து பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டு, முதல் பக்கத்தை அகற்ற முடியாத வகையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.