ஒசூர் சிப்காட் நண்பர்கள் சந்திப்பில் பேசுகிறார் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி. ஆர். பி.ராஜா 
தமிழ்நாடு

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

ஒசூரின் தொழில் துறை வளர்ச்சி தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா.

DIN

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்டாம் கட்ட வளர்ச்சிக்கு பல்வேறு முதலீட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து குவித்துள்ளார். இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு ஒசூருக்கு கிடைத்துள்ளது என்றார்.

ஒசூரில் சிப்காட் நண்பர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது:

இரண்டாம் கட்ட வளர்ச்சியை நோக்கி ஒசூர் முன்னேறி வருகிறது. ஒசூர் தொழில் வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் மு கருணாநிதி முதல் சிப்காட் தொடங்கிவைத்து தொழில் புரட்சியை தொடக்கி வைத்தார்.

தற்போது, ஒசூரின் இரண்டாவது கட்ட வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் மு க . ஸ்டாலின் ஒசூரில் விமான நிலையம், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை தொடக்கி வைத்து வருகிறார். முதலீடுகள் குவிந்து வருகிறது.

இதையும் படிக்க: பட்டதாரிகளுக்கு ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை!

எனவே அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். வெகுவிரைவில் டைட்டில் பார்க் நியூ அமைய உள்ளது. பெங்களூருக்கு அருகில் உள்ள ஒசூர், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய முடியும்.

இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது என்றார்.

இந்த விழாவில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, ஒசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி எம்எல்ஏ மதியழகன் , தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், ஒசூர் மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், இயக்குநர் செந்தில்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், ஹோஸ்டியா தலைவர் மூர்த்தி, பொருளாளர் வடிவேலு, செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரன்கோவிலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கலிங்கப்பட்டி, திருவேங்கடம் பகுதிகளில் இன்று மின்தடை

முடியும் என்றால் முடியும்!

தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கைவிலங்குடன் வந்த விவசாயிகள்

SCROLL FOR NEXT