முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா: பிப்.26-ல் தொடக்கம்!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா தொடர்பாக...

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 8:04 AM
சிதம்பரத்தில் செய்தியாளிடம் பேட்டி அளித்த நாட்டிய அஞ்சலி அறக்கட்டளையினர்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்.26-ம் தேதி தெற்குரதவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி மார்ச்.2-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது என அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து 2015-ம் ஆண்டு பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்குவீதியில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வந்தனர்.

நடராஜர் கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கோயில் பொதுதீட்சிதர்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஆண்டு 43-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் வருகிற பிப்.26-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இதுகுறித்து நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ,சம்பந்தம் தெரிவித்தது:

நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வடமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர்.

நாட்டியாஞ்சலியில் தேவார பன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், துணைத்தலைவர்கள் சக்தி ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், செயலாளர் ஏ.சம்பந்தம், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், வி.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.