தமிழ்நாடு

தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா: விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழா தொடங்கியது..

DIN

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு தொடங்கின. விழா அரங்கிற்குள் விஜய் காலை 10.10 மணியளவில் மேடைக்கு வந்தார். அவருடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் விழாவில் பங்கேற்றுள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்த தவெக பொதுச் செயலர் ஆனந்த்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்க்கு தவெக பொதுச் செயலர் ஆனந்த் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். தவெகவை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுனர். விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சி மேடைக்கு வந்த விஜய், புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்புக்கு எதிராக போராட உறுதியேற்போம் என தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் அந்த பேனரில் கையெழுத்திட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT