முகப்பு
தமிழ்நாடு

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தரிசனம்!

மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் "வளைகாப்பு அம்மன்" அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 5:17 PM
லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் " வளைகாப்பு அம்மன் " அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன்.
பகிர்:

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் " வளைகாப்பு அம்மன் " அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் வணிக வைசிய சங்கம் சார்பில் 124-ஆம் ஆண்டு பெருந்திருவிழா டிச.29-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

விழாவில் 7 ஆம் நாளான வியாழக்கிழமை பகவதி அம்மனுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் நேர்த்தியாக வளைகாப்பு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்காரம் மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

குழந்தைப்பேறு, திருமணத் தடை நீங்கும் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் அம்மனுக்கு வளையல்கள் அளித்தனர்.

இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.