சென்னை: தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. புத்தாண்டு பிறந்து முதல் நாள் பள்ளிக்குச் செல்வதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வந்தனர்.
இந்தநிலையில், பள்ளிகளுக்கு நேரில் சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார்.
சென்னை நீலாங்கரை அரசு நடுநிலைப் பள்ளிக்கு இன்று காலை வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளியில் வகுப்பறைகள் உள்ளிட்டவை சுகாதாரத்துடன் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து ஆசிரியர்களிடமும் கலந்துரையாடினார்.
புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவர்கள் கல்வியில் பல சாதனைகள் படைக்கவும் அவர் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
அரையாண்டு விடுமுறை முடிந்தது!
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தோ்வுகள் கடந்த டிச. 9 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. தொடா்ந்து, டிச. 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.
விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. புத்தாண்டில் முதல் நாள் வகுப்பு என்பதால் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
மாணவா்களுக்கு தேவையான 3-ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்விப் பொருள்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதேவேளையில் தொடா் கனமழையால் கடலூா், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தோ்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த 3 மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு விடுமுறைக்கு பின்னா் தோ்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, மழை பாதித்த கடலூா், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு மாவட்ட அளவில் ஜன. 2 முதல் 10-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.