கோப்புப்படம் 
தமிழ்நாடு

என்ன, டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி மாதம் 2 நாள்கள் விடுமுறையா?

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி மாதம் 2 நாள்கள் விடுமுறை

DIN

விடுமுறைகளுக்குப் பஞ்சமே இல்லாத ஜனவரியில், டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை விடப்படுகிறது. அதிலும் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமையாக வருகிறது.

மழை, வெள்ளம், புயல் அடித்தால் கூட விடுமுறை விடப்படாத ஒரே கடையாக இருப்பது டாஸ்மாக் கடைகள்தான். ஆனால், ஒரு ஆண்டில் கட்டாயமாக 8 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

இந்த நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் இரண்டு நாள்கள் விடுமுறை விடப்படவிருக்கிறது. திருவள்ளுவர் நாளான ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமையும், குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

அண்மையில், தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் க்யூஆர் கோடு முறையில் பில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அது முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று மக்கள் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

காரணம், தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லி, டாஸ்மாக் ஊழியர்கள் சரியான பில்லை வழங்குவதில்லை என்கிறார்கள் குடிமகன்கள். இதனால், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தொடர்கதையாகவே இருப்பதாகக் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியை பெறவில்லை: மத்திய அரசு

ஆக. 25 -இல் இந்தியா - வங்கதேசம் எல்லை பேச்சுவாா்த்தை

SCROLL FOR NEXT