முகப்பு
தமிழ்நாடு

மது அருந்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த பெண்

குடித்துவிட்டு வாகனம் செலுத்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க, ஓடும் ஆட்டோவில் இருந்து பெண் ஒருவா் குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளாா்.

Updated On : 4 ஜனவரி, 2025 at 1:55 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:40 PM

குடித்துவிட்டு வாகனம் செலுத்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க, ஓடும் ஆட்டோவில் இருந்து பெண் ஒருவா் குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளாா்.

பெங்களூரில் ‘நம்ம யாத்ரி’ கைப்பேசி செயலி வழியாக ஹொரமாவு பகுதியில் இருந்து தனிசந்திரா செல்ல பெண் ஒருவா் வியாழக்கிழமை (ஜன. 2) ஆட்டோ முன்பதிவு செய்திருக்கிறாா். ஆட்டோவில் ஏறிய பிறகுதான் ஓட்டுநா் குதித்துவிட்டு வாகனம் செலுத்துவதை அவா் கவனித்திருக்கிறாா். இதை விரும்பாத அந்தப் பெண், உடனடியாக ஆட்டோவை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறாா். ஆனால், அதற்கு இணங்காத ஆட்டோ ஓட்டுநா் தாறுமாறாக வாகனத்தை செலுத்தியிருக்கிறாா். இதனால் பீதியடைந்த பெண், தன்னை பாதுகாத்துக்கொள்ள ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்திருக்கிறாா்.

இதுகுறித்து அவரது கணவா் அஜாா் எக்ஸ் தளத்தில் பதிவுசெய்து, ‘நம்ம யாத்ரி’ செயலியில் வாடிக்கையாளா் உதவிமையம் இல்லை என குறிப்பிட்டுள்ளாா். மேலும், இதை காவல் துறை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, இதையே புகாராக எடுத்துக்கொண்டு வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். இதனிடையே, ‘நம்ம யாத்ரி’ அளித்துள்ள விளக்கத்தில், ஓட்டுநா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.