திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | மார்க்சிஸ்ட் கம்யூ. புதிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது,
''உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம்.
மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைகளில்தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
போராட்டங்களுக்கு அனுமதி மறுக்க எந்தவொரு அரசுக்கும் உரிமையில்லை. ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள்.
எங்கள் பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். காவல் துறையின் அணுகுமுறைக்கு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை திமுக தலைமை புரிந்துகொள்ளும் என நம்புகிறோம்.
முரசொலி கட்டுரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
''திமுக உடன் பலமுறை உறவில் இருந்துள்ளோம். மாற்று கூட்டணியிலும் இருந்துள்ளோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் சமரசமற்ற போராட்டத்தை நடத்துவதால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற கட்சியாக இருக்கிறது. திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை; அப்படிக் கூறுவது பொறுத்தமற்றது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.