எம்பி சு. வெங்கடேசன் கோப்புப் படம்
தமிழ்நாடு

எம்.பி. சு. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!

மாநில மாநாட்டில் கலந்துகொண்ட எம்.பி. சு. வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி

DIN

விழுப்புரத்தில் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட எம்.பி. சு. வெங்கடேசனுக்கு திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் இன்று காலை கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், எம்.பி. வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரை உடனடியாக விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு முதுகுவலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தற்போது நலமாக உள்ளதாகக் கூறினர். மேலும், அவர் இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. எம்.பி. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாள பொன். கௌதமசிகாமணி உள்ளிட்டோர் மருத்துமனைக்கு நேரில் சென்று சு.வெங்கடேசனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT