ஆளுநர் ரவி.  
தமிழ்நாடு

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

DIN

தனது உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம்.

இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார்.

அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார்.

தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.

அதிமுக எம்எல்ஏக்களுடன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

பேரவையில் முதலில் தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ரவி முன்பே வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறியதாக தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT