முகப்பு
தமிழ்நாடு

குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 4:22 PM
கோப்புப் படம்
பகிர்:

குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஏற்கெனவே 3 முறை காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பட்டு வருகின்றன.

இதில், டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு 6,244 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. அதில் செப்டம்பர் மாதம் 480, அக்டோபர் மாதம் 2,208 மற்றும் 559 என இரண்டு முறை அதிகரிக்கப்பட்டு, ஏற்கனவே 9,491 காலிப்பணியிடங்களுக்கு முடிவுகள் அக்டோபர் 28 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments