தமிழ்நாடு

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! மதுரை காவல் அதிகாரி கைது!

திருக்கார்த்திகை விழாவுக்கு திருப்பரங்குன்றம் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை

DIN

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி கைது செய்யப்பட்டார்.

மதுரையில் திருக்கார்த்திகை (டிச. 13) விழாவின்போது, திருப்பரங்குன்றத்துக்கு சென்ற 14 வயது சிறுமியுடன், திடீர் நகர் குற்றப்பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக இருந்த ஜெயபாண்டி பேச்சு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, கழிப்பறை சென்ற சிறுமியைப் பின்தொடர்ந்த ஜெயபாண்டி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜெயபாண்டியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து, ஜெயபாண்டி மீது குழந்தைகள் நலப் பிரிவில் சிறுமியின் பெற்றோர் பாலியல் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, ஜெயபாண்டி மீதான புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது போக்ஸோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், ஜெயபாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT