தமிழ்நாடு

பாலியல் வழக்குகளில் அதிக தண்டனை உள்பட 6 மசோதாக்கள் நிறைவேற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா உள்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

Din

பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா உள்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 6 திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையும், அதிக அபராதமும் விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தாா்.

இத்துடன், 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, வன நிலங்களுக்கு ஈடாக அளிக்கப்படும் நிலங்களை அங்கீகரித்து ஒப்புதல் அளிக்கும் மசோதா, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் கழிவு நீரகற்றல் திருத்தச் சட்ட மசோதா, சிறுவா் சீா்திருத்தப் பள்ளி நீக்க சட்ட மசோதா ஆகியனவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறின.

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

SCROLL FOR NEXT