இடைத்தேர்தல் 
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 10 பேர் வேட்பு மனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாவது நாளான இன்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் நாளில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 17ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாளாகும். பிப்.8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளில் மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று மேலும் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். எனினும் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு, திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜனவரி 17ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் நாதக கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT