துபை கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி: 2025 துபையில் நடைபெற்ற 24H கார் பந்தயம் 991 பிரிவில் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தைப் பிடித்ததை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் அஜித்குமார் அணி திராவிட மாடல் அரசை காட்சிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் லோகோவை கார் பந்தயத்தின்போது பயன்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று நமது தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென அஜித்குமார் மற்றும் அவரது குழுவை வாழ்த்துகிறேன்.
எடப்பாடி பழனிசாமி: துபாயில் நடைபெற்ற #24HSeries கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் தலைமையிலான #AjithkumarRacing அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்: துபையில் நடைபெற்று வரும் 24 ஹவர் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜித் குமார் அணியினருக்கும் Spirit of the Race விருது பெற்ற அஜித் குமாருக்கும் எனது பாராட்டுக்கள்.
அவரும், அவரது அணியினரும் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது நல்வாழ்த்துகள்.
கமல்ஹாசன்: அஜித்குமாரின் பந்தய அணியினர் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். எனது நண்பர் அஜித்குமார் தனக்கு பிடித்த விஷயங்களுக்கான எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார்.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான மற்றும் பெருமைமிகு தருணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.