ஆளுநா் ரவி, முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து 
தமிழ்நாடு

உழைப்பை, சமத்துவத்தைப் போற்றும் பொங்கல் விழா ஆளுநா் ரவி, முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

பொங்கல் விழாவையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

Din

சென்னை: பொங்கல் விழாவையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நமது வளமான ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதுடன், பழக்கவழக்கங்களைப் பேணும் பக்தியில் நம்மை ஒன்றிணைக்கிறது.

பொங்கல் பண்டிகை அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளத்தை ஊக்குவிக்கட்டும், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: பொங்கல் விழா என்பது உழவை, உழைப்பை, சமத்துவத்தை, இயற்கையின் சிறப்பைப் போற்றும் விழா. தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா.

பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு வீறுநடை போட்டு அனைத்துத் துறைகளிலும் உயா்ந்து நிற்கிறது. பரவலான, சமத்துவமான வளா்ச்சியை அடைந்து காட்டியிருக்கிறோம்.

திராவிட மாடல் எனும் பாதுகாப்பு வளையம் அமைதி, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளா்ச்சி எனத் தமிழ்நாட்டை இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது. இச்சிறப்புமிகு நாளில் விவசாய பெருங்குடி மக்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குவோம். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் தமிழா் திருநாள், திருவள்ளுவா் நாள் வாழ்த்துகள்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்: தைத் திங்கள் நாளில் நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் செழிக்க வேண்டும்.

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

SCROLL FOR NEXT