நடிகர் அஜித் குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துபையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி, மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்துவிட்டு கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார்.
Advertisement
Advertisement
சமீபத்தில் அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை அவர் உருவாக்கினார். இந்த அணி, துபை கார் பந்தயத்திலும் பங்கேற்றுள்ளது.
தகுதிச்சுற்றில் 7வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித் குமார் ரேஸிங் அணி, துபையில் நடைபெற்ற 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமாருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அஜித் குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த்,
’’அன்புள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதித்துக்காட்டியுள்ளீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். மிகுந்த அன்புகள்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கூடுதல் டிக்கெட் கட்டணம்: திரையரங்குகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.