அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு!
தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அறிவிப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையன்று (ஜன. 14) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் களமாடும்போது, காளை நெஞ்சில் முட்டியதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜாஜி அரசு மருத்துவமனையில் நவீன் பலியானார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முற்பட்டபோது 28 பேருக்குமேல் காயம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் படுகாயமடைந்த 5 பேருக்குமேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.