நாளை கனமழை பெய்யும் மாவட்டங்கள் எது எது?
நாளை கனமழை பெய்யும் மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 18ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. வெடித்துச் சிதறிய ராக்கெட்! பதறாத எலான்!
ஜனவரி 19ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தென்தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என்று கூறப்பட்டுள்ளது.
இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். திருநெல்வேலியின் மலைப் பகுதிககளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.