தமிழ்நாடு

எம்ஜிஆர் பிறந்தநாள்: தமிழக அரசு, அதிமுக, பாஜக மரியாதை!

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

DIN

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, அதிமுகவினர், பிரதமர் மோடி, தமிழக அரசு சார்பாகவும் மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் 108-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அவரது உருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தியதுடன், கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடியும் புகழாரம் சூட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சென்னை கிண்டியில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு, அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளில், அவரை வாழ்த்தி சிறந்த தேசியவாதி என்றும், விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் உதவியவர் என்றும் புகழாரம் சூட்டினார். இவர்கள்தவிர, நடிகர் சங்க வளாகத்திலும் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்ட போட்டி: தஞ்சாவூா் அணி முதலிடம்

இதய ஓரத்தில் என்றும்.... சமந்தா!

இளமை திரும்புதே... மஞ்சு வாரியர்!

ஃபிட்னஸ் புயல்... மாளவிகா மோகனன்!

இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது! -டிரம்ப்

SCROLL FOR NEXT