தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
விமான நிலைய அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூா் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக கடிதம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் பரந்தூர் செல்வதற்கு ஜன.19 அல்லது ஜன.20ஆம் ஆகிய தேதிகளில் ஒன்றில் அனுமதி கேட்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல்முறையாக போராட்ட களத்திற்கு நேரடியாக செல்லவிருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.